;
Athirady Tamil News

சூர்யா டீமில் சாய் பல்லவி..!!

0

செல்வராகவன் – சூர்யா கூட்டணியில் உருவாகிவரும் ‘என்ஜிகே’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை சாய் பல்லவி இணைந்திருக்கிறார்.

செல்வராகவன் -சூர்யா கூட்டணி முதன்முறையாக இணைந்திருக்கும் படம் ‘என்ஜிகே’. தன்னுடைய பெரும்பாலான படங்களில் ஒரு நாயகியை இரண்டு நாயகர்கள் காதலிப்பது போல் திரைக்கதை அமைத்திருப்பார் செல்வராகவன். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகிய இரண்டு நாயகிகளை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

அம்பாசமுத்திரத்தை கதைக் களமாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பை நேரடியாக அங்கு நடத்தாமல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து நடத்தினர். அதில் ரகுல் ப்ரீத் சிங் கலந்துகொண்டார்.

சென்னை படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் பொள்ளாச்சியில் படப்பிடிப்பைத் துவங்கி நடத்திவருகின்றனர். சூர்யா, இளவரசு, பாலா சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்ததாக சாய் பல்லவி சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இதன் காரணமாக சாய் பல்லவி தற்போது படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார்.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுப் படத்தை வெளியிடப் படக் குழு திட்டமிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + twelve =

*