இறுதிகட்டத்தை எட்டிய அதர்வா படம்..!!

அதர்வா, மேகா ஆகாஷ் ஜோடி சேர்ந்திருக்கும் பூமராங் படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் பூமராங். அதர்வாவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். ‘மேயாத மான்’ இந்துஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்காக மூன்று விதமான கேரக்டரை ஏற்றிருக்கிறார் அதர்வா.
பத்மாவத், மாம், 102 நாட் அவுட் ஆகிய படங்களின் மூலம் ப்ரோஸ்தடிக் மேக்கப்பால் புகழ்பெற்ற ப்ரீத்திஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா ஆகிய இருவரும் பணிபுரிந்து அதர்வாவின் மூன்று விதமான கேரக்டருக்கான தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆக்ஷன் த்ரில்லரான இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சுஹாசினி மணிரத்னம், உபென் படேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பு சென்னை, அந்தமான் உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் இறுதிகட்டப் படப்பிடிப்பு மூன்று நாட்களில் முடிவடைந்துள்ளதாக இயக்குநர் ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார்.
பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இதற்கு ‘அர்ஜுன் ரெட்டி’ ரதன் இசையமைக்கிறார். படத்தை இயக்குவதோடு மசாலா பிக்ஸ் பேனர் சார்பில் ஆர்.கண்ணன் தயாரித்துள்ளார்.