;
Athirady Tamil News

விஜய் 62: வரலட்சுமி வெளியிட்ட புது தகவல்..!!

0

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடர்பான முக்கியத் தகவலை நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களுக்குப் பிறகு விஜய்யுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் முருகதாஸ். விஜய்யின் 62ஆவது படமாக உருவாகிவரும் இந்தப்படம் சமகால அரசியலை பேசும் படமாக உருவாகிவருகிறது. பைரவா படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அரசியல் சம்பந்தமாக உருவாகும் இந்தப்படத்தில் பழ.கருப்பையா, ராதாரவி இருவரும் இருபெரும் அரசியல் தலைவர்களாக நடிக்கின்றனர். இவர்களுக்கும் விஜய்க்குமான காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அது முடிவடைந்த நிலையில், தற்போது சென்னை ஏர்போட்டில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வரலட்சுமியும் இணைந்திருக்கிறார்.

படத்தில் நடிப்பது குறித்து விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டதால் வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தளபதி 62 படப்பிடிப்பில் இணைந்துவிட்டேன். ஆனால் என்னுடைய தோற்றம் குறித்த தகவல்களை வெளிப்படுத்த முடியாது. எனவே, எனக்கு பதிலாக முருகதாஸ் போஸ் கொடுத்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டு முருகதாஸ் கிளாப் போர்டுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அந்த கிளாப் போர்டில் 46ஆவது காட்சி என்று எழுதப்பட்டுள்ளது.

மேலும் விஜய் நடித்துவரும் காட்சிகள் சம்பந்தமான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் மஞ்சள் நிறக் கோட்டு அணிந்த விஜய், விமான நிலையத்திலிருந்து வெளிவரும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

கிட்டத்தட்ட 70 சதவிகிதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், ஜூலை மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அடுத்த கட்டப் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்கிறது விஜய் டீம். விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 15 =

*