;
Athirady Tamil News

கவர்ச்சிக்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம்?..!!

0

‘ஒரு குழந்தைக்கு தாயான பிறகு ஐட்டம் டான்ஸ் ஆடலாமா?’ என்ற ரசிகரின் கேள்விக்கு கஸ்தூரி காட்டமாக பதிலளித்திருக்கிறார்.

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தமிழ் படம் 2.0. பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக உருவாகியுள்ள இதன் டீசர் நேற்று (ஜூன்1) காலை வெளியிடப்பட்டது.

இதில் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு, துப்பறிவாளன், மெர்சல், விவேகம், விஐபி, துப்பாக்கி, ஆம்பள உள்ளிட்ட பல படங்களைக் கலாய்த்திருந்தனர். அதில் கஸ்தூரி ஒரு பாடலுக்குக் கவர்ச்சியாக நடனமாடியிருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. சமகால அரசியலில் தீவிரமாக இயங்கி வரும் கஸ்தூரி இது போன்ற காட்சிகளில் நடித்தது ஏன்? என அவரிடம் கேள்வியெழுப்ப பலர் முயற்சித்துவந்த நிலையில், அந்த கேள்விகளை தவித்துவந்த கஸ்தூரி ட்விட்டரில் அதற்கான பதிலை அளித்துள்ளார்.

​அக்காட்சிகள் குறித்து ‘தாயான பிறகு ஐட்டம் டான்ஸ் ஆடுவது சரியா’ என்று ட்விட்டர் பக்கத்தில் கஸ்தூரியிடம் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் கூறும் விதமாக, “இத்தகைய வழக்கமான தமிழ் மனநிலைதான் மாற வேண்டும் என நான் விரும்புகிறேன். கவர்ச்சியாக இருக்கும் பெண் அறிவுடையவளாக இருக்க மாட்டாள். அவள் தாய்மைக்குத் தகுந்தவள் அல்ல. அவள் நன்மதிப்புகளையும் கொண்டிருக்க மாட்டாள் என்றெல்லாம் வகுத்துவைக்கப்பட்டுள்ளது. நாங்கள் எப்போதாவது ஏதாவது ஒரு நடிகரைப் பார்த்து, நீங்கள் ஏன் மதுபோதையில் இருப்பதுபோல் நடிக்கிறீர்கள், ஏன் கவர்ச்சியான பாடல்களுக்கு நடனமாடுகிறீர்கள், ஏன் காதல் காட்சிகளில் நடிக்கிறீர்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறோமா?” எனப் பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 1 =

*