;
Athirady Tamil News

யார் இவர்கள்?: யாரைப் பற்றிய கதை?..!!

0

பாலாஜி சக்திவேல் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு யதார்த்த பாணியில் படங்களை இயக்கும் இயக்குநர்களில் ஒருவர் பாலாஜி சக்திவேல். பாலாஜி சக்திவேலின் நடிகர்கள், கதையையும் அதன் கதாபாத்திரங்களையும் கடந்து எப்போதும் வெளியே தெரிவதில்லை; அது தமன்னா நடித்திருந்தாலும் கூட.

வழக்கு எண் 18/9 படத்திற்குப் பின் லிங்குசாமி தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கிய படம் ரா ரா ராஜசேகர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில் பாதியில் நின்றுபோனது. அதன் பின் காதல், வழக்கு எண் 18/9 ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் மில்டனின் ரஃப் நோட் புரொடக்‌ஷன் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் புதிய படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்திற்கு யார் இவர்கள் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கோலி சோடா 2, கடுகு ஆகிய படங்களில் நடித்துள்ள சுபிக்‌ஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் ஆகியவை ஜூன் 7ஆம் தேதி வெளியாகவுள்ளன.

“எங்களை அடக்க நினைப்பது அதிகாரமா, ஆணவமா?, உலகத்தில் அநீதி கண்டு நீ குமுறி எழுவாயானால் நாம் இருவரும் தோழர்கள்” போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களில் சீமான், பா.ரஞ்சித் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். பாலாஜி சக்திவேல் தனது படங்களில் மெல்லிய தொனியில் அரசியல் பேசிவரும் நிலையில் இந்த போஸ்டர்கள் முழு அரசியல்படமாக இது உருவாகியிருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்போடு விஜய் மில்டன் ஒளிப்பதிவும் செய்துள்ள நிலையில் ஜாவித் ரியாஸ் இசையமைத்துள்ளார். விரைவில் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − four =

*