;
Athirady Tamil News

கலக்கப்போவது இனியா..!!

0

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ராஜ்குமார் இயக்கும் புதிய படத்தில் இனியா ஒப்பந்தமாகியுள்ளார்.

குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள், தொடர்கள் வெளியானாலும் பெரும்பாலும் பெண்களே அதன் பார்வையாளர்களாக உள்ளனர். எனவே அவர்களை மையமாக வைத்தே பல தொடர்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. தொடர்கள் பார்த்துக்கொண்டிருந்த பெண்களை ரியாலிட்டி ஷோக்கள் பக்கம் திருப்பியதில் விஜய் தொலைக்காட்சிக்கு முக்கிய பங்கு உண்டு. பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு அனைத்துத் தரப்பினரும் பார்வையாளர்களாக மாறினர்.

தமிழ் சினிமாவில் தற்போது வெற்றிகரமாக வலம்வரும் சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் ஆகியோர் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களே. இந்த நிகழ்ச்சியின் இயக்குநரான ராஜ்குமார் தற்போது திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

செயலி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் இனியா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். பிரேம் குமார், ஸ்ரீமன், தம்பி ராமையா, விடிவி கணேஷ், ரோபோ ஷங்கர், சிங்கம் புலி, நான் கடவுள் ராஜேந்திரன், தேவ தர்ஷினி என முழுவதும் நகைச்சுவைக் கூட்டணியில் இந்தப் படம் உருவாக உள்ளது.

யூ.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, எல்.வி.முத்து கணேஷ் இசையமைக்கிறார். ஓசன்னா ஏஜேஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 3 =

*