;
Athirady Tamil News

காதலை ஊர்ஜிதப்படுத்தும் ப்ரியங்கா..!!

0

நடிகை ப்ரியங்கா சோப்ராவின் காதல் பற்றி வரும் வதந்திகளை அவரது நடவடிக்கைகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் பிசியாக இயங்கிவருகிறார். அமெரிக்காவில் தங்கி ஹாலிவுட் படங்கள், டிவி சீரியலில் கவனம் செலுத்திவருகிறார். அவ்வப்போது இந்தியாவுக்கும் வந்து செல்கிறார். ப்ரியங்காவும், அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர் நிக் ஜோனஸும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியானது.

அவர்கள் காதலிப்பதாகக் கூறப்படுகிறது. ப்ரியங்காவும், நிக் ஜோனஸும் ஒருவர் மீது மற்றொருவர் அன்பு வைத்துள்ளனர். இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள். இருவரையும் பார்த்தாலே இது நட்பு இல்லை அதையும் தாண்டிய உறவு என்பது தெரிகிறது என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

“நல்ல மாப்பிள்ளைக்காகக் காத்திருக்கிறேன், கிடைத்ததும் திருமணம் செய்து கொண்டு நிறையக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்று ப்ரியங்கா அண்மையில் தெரிவித்திருந்தார். நிக் ஜோனஸ் ப்ரியங்கா சோப்ராவைவிட 10 வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − 8 =

*