;
Athirady Tamil News

வாழ்நாள் அனுபவத்தைத் தந்த படம்..!!

0

நிவின் பாலி நடிக்கும் காயங்குளம் கொச்சுண்ணி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சரியான திட்டமிடல் இருந்தால் குறைந்த நாள்களிலேயே படப்பிடிப்பை முடித்து பட்ஜெட்டைக் குறைக்கலாம் என்பது திரைப்பட உருவாக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறையாக உள்ளது. தமிழைவிட மலையாளத்தில் குறைந்த நாள்களிலேயே படப்பிடிப்பை முடித்து தரமான படங்களை உருவாக்குகின்றனர். அங்கமாலி டைரிஸ் படத்தை இயக்கிய லிஜோ ஜோஸ் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள ஈ மா யூ திரைப்படம் 35 நாள்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டு 18 நாள்களில் படப்பிடிப்பை முடித்துள்ளனர். படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருவதோடு பல்வேறு திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டுவருகிறது.

திட்டமிடல்தான் ஒரு படத்தை குறைவான நாள்களில் படம்பிடிக்கக் காரணமாக உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டாலும் ஒரு படத்தின் படப்பிடிப்பு நாள்களை அந்தப் படத்தின் கதையும் அதன் உருவாக்க முறையுமே தீர்மானிக்கின்றன. நீண்ட வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படங்கள் மற்ற படங்களைவிட அதிகமான காட்சிகளைக் கொண்டு உருவாகின்றன. இத்தகைய படங்களின் படப்பிடிப்பு நாள்கள் அதிகமாகின்றன.

கேரள மாநிலத்தில் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காயங்குளம் கொச்சுன்னி என்பவரது வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகிவரும் படத்தில் நிவின் பாலி, ப்ரியா ஆனந்த் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் லால் நடிக்கிறார். காயங்குளம் கொச்சுண்ணி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு 161 நாள்கள் நடைபெற்றுள்ளது. “161 நாள்களும் ஊக்கமளிக்கும் நபர்களுடன் பணியாற்றியுள்ளேன். வாழ்நாள் அனுபவத்தை இந்த ஒரு படம் கொடுத்துள்ளது” என படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து நிவின் பாலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் இந்தப் படத்திற்கு பாபி மற்றும் சஞ்சய் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். கோபி சுந்தர் இசையமைக்க ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 1 =

*