;
Athirady Tamil News

‘காலா’வின் ரியல் செட்டிங்..!!

0

‘காலா’ படத்தின் மேக்கிங் வீடியோ (ஜூன் 1) யூடியூப்பில் வெளியாகியுள்ளது.

ரஜினி – பா.ரஞ்சித் காம்போவில் தயாராகியுள்ள ‘காலா’ ஜூன் 7ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது. மும்பையில் வசிக்கும் தமிழர்களைப் பற்றிய படமாக உருவாகியுள்ள இதில், ஈஸ்வரி ராவ், ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானே படேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் அந்த செட்டுகள் எவ்வாறு அமைக்கப்பட்டன; படப்பிடிப்பு எவ்வாறு நடந்தது என்பவை குறித்து படத்தின் ஆர்ட் டைரக்டர் மற்றும் இயக்குநர் பகிர்ந்துகொள்ளும் சுவாரஸ்யத் தகவல் அடங்கிய படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சுமார் 5 நிமிடத்துக்கும் மேல் ஓடும் இந்த வீடியோவைத் தற்போது பலரும் பார்த்து வருகின்றனர். அத்துடன் காலாவின் இரண்டு புரோமோ வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வீடியோவில் படம் குறித்துப் பேசியுள்ள பா.ரஞ்சித், “ஆர்ட் டைரக்டர் டி.ராமலிங்கத்துக்கும் எனக்கும் ஓவியக்கல்லூரியில் இருந்தே நல்ல பழக்கம். வருங்காலத்தில் படம் எடுக்கும்போது இருவரும் இணைந்து பணியாற்றுவோம் எனக் கூறியிருந்தேன். அதுபோல அட்டக்கத்தியில் இருந்து காலா வரை அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன் ” எனத் தெரிவித்துள்ளார்.

ஆர்ட் டைரக்டர் டி.ராமலிங்கம், “ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய ஸ்லம் ஆன தாராவியை முடிந்த அளவுக்கு அப்படியே செட்டில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். தாராவியில் அதிக காட்சிகளை படமாக்க முடியாததால் அதே போன்ற செட்டில் பல காட்சிகளைப் படமாக்கியுள்ளோம். அதேபோல் யுனெஸ்கோ புராதன சின்னமாக அறிவித்துள்ள மும்பையின் வண்ணாந்துறையையும் அப்படியே செட்டில் கொண்டு வந்துள்ளோம். அது மிகச்சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − eleven =

*