;
Athirady Tamil News

த்ரிஷாவைத் திரையில் பார்ப்பது எப்போது?..!!

0

த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள மோகினி படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் த்ரிஷா நடிப்பில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களாவது வெளிவந்துவிடும். 2016ஆம் ஆண்டு தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்த ‘கொடி’ படத்தைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வேறெந்தப் படமும் தமிழில் வெளியாகவில்லை. மலையாளத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்த ஹே ஜூட் படம் இந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. ஆனால், தமிழில் படம் வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

த்ரிஷா நடிப்பில் உருவாகிவரும் படங்களின் பட்டியல் நீளமானது. கர்ஜனை, 1818, 96, சதுரங்க வேட்டை 2, மோகினி எனத் தொடரும் இந்தப் பட்டியலில் எந்தப் படம் திரைக்கு முதலில் வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இதில் மோகினி திரைப்படம் முன்னணியில் உள்ளது.

ஏற்கெனவே விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் சமீபத்தில் சென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்ய தயாரிப்பாளர்கள் சங்கம் அமைத்துள்ள குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் இந்த மாதம் இறுதியில் இந்தப் படம் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மாதேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆர்த்தி கணேஷ், மதுமிதா, சுவாமி நாதன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை மார்வல் வொர்த் புரொடக்ஷன் தயாரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 4 =

*