;
Athirady Tamil News

பூஜாவின் அடுத்த என்ட்ரி..!!

0

இறைவி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம்பெற்ற பூஜா தேவாரியா நாடகங்களிலும் தொடர்ந்து பங்கெடுத்து வருகிறார். தற்போது புதிய வெப்சீரீஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.

வேலைக்காரன் படத்தில் இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் யாஸ்மீன் பர்வின். இவர் இயக்கும் புதிய வெப்சீரீஸ் ‘403’. இதன் மூலம் வெப்சீரீஸிலும் களமிறங்குகிறார் பூஜா தேவாரியா. சென்னை டு சிங்கப்பூர் படத்தில் கதாநாயகனாக நடித்த கோகுல் ஆனந்த் இணைந்து நடிக்கிறார்.

13 எபிசோடுகளாக வெளிவரவுள்ள இந்த வெப்சீரீஸின் படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் 52 மணி நேரம் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று 19 காட்சிகள் படமாக்கப்பட்டன. இன்னும் ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகனான ஏ.ஹெச்.காசிஃப் இசையமைக்கிறார். ‘விஐயூ’ சேனல் மூலம் ஜூலை மாத இறுதியில் இந்த வெப்சீரீஸை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 6 =

*