;
Athirady Tamil News

தமிழ்த் திரையுலகில் புதிய நாயகி..!!

0

விஜய் ஆண்டனி அடுத்து நடிக்கவுள்ள கொலைகாரன் திரைப்படத்தில் மாடல் அழகி ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

தனது படங்களுக்கு வித்தியாசமான தலைப்புகளைச் சூட்டிவரும் விஜய் ஆண்டனி தனது அடுத்த படத்துக்கு கொலைகாரன் என்று டைட்டில் வைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கும் இந்தப் படத்தில் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் ஆஷிமா நர்வால் என்ற சிட்னியைச் சேர்ந்த மாடல் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். 2015ஆம் ஆண்டு புதுவருடத்தின்போது மாடலிங் துறையில் நுழைய வேண்டும் என்பதை ஆஷிமா நர்வால் ஒரு தீர்மானமாகவே வைத்திருந்தார். அந்த ஆண்டுக்குள்ளேயே இவர் மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா எலிஜென்ஸ் மற்றும் மிஸ் இந்தியா குளோபல் 2015 ஆகிய இரு பட்டங்களை வென்றார்.

ஆஷிமாவுக்குக் கலை மீது எப்போதும் ஒரு கண் உண்டு. ஆஷிமா தனது ஒன்பதாவது வயதில் சிறந்த கலைப் படைப்புக்கான முதல் விருதைப் பெற்றார். தொடர்ந்து பல பட்டங்களையும் பரிசுகளையும் குவித்துள்ளார். ஆஷிமா நர்வால் மிகக் குறுகிய கால கட்டத்திலேயே ஆஸ்திரேலியாவின் பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். தற்பொழுது மாடலாக இருக்கும் இவர் பட வாய்ப்புகள் மூலம் நடிப்பு உலகில் அறிமுகமாகி உள்ளார். மேலும், நாடகம் நடிப்பது, நடனம் என்பது ஆஷிமாவின் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்றாகும்.

சிறப்புத் திறன்கள், புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதில் ஆஷிமாவுக்கு அதிக ஆர்வம் உண்டு. இதனால் இவர் தெலுங்கு, தமிழ் மொழிகளைக் கற்றிருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + three =

*