;
Athirady Tamil News

பிட்காயின்: ஷில்பா ஷெட்டி கணவர் தப்பினாரா?..!!

0

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு, பிட்காயின் முறைகேட்டில் சிக்கியதற்காக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதற்கான விசாரணைக்கு ஆஜராக ராஜ் குந்த்ரா தொடர்ந்து 9 மணிநேரம் விசாரிக்கப்பட்டிருக்கிறார்.

வெளிநாடுகளில் உள்ளதுபோல இந்தியாவிலும் பிட் காயின் எனப்படும் மெய் நிகர் கரன்சி மறைமுகமாக புழக்கத்துக்கு வந்ததையடுத்து, இந்தியா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும், பிட் காயின் பயன்படுத்த கூடாது என ரிசர்வ் வங்கியும் கடந்த வருட இறுதியில் எச்சரித்திருந்தது. ஆனால், அதையும் மீறி இந்தியாவில் சிலர் பிட் காயின் உபயோகப்படுத்தி வந்தனர். இந்நிலையில், மும்பையின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, பிட்காயின் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகத் குற்றச்சாட்டு எழுந்து அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.

முன்னதாக சுமார் 8,000 முதலீட்டாளர்களிடம் பிட் காயின் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கடந்த ஏப்ரல் மாதம் அமித் பரத்வாஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் அவருடன் தொடர்புடைய பல தொழிலதிபர்களை மறைமுகமாக அமலாக்கத்துறை கண்காணித்து வந்தது. அப்படி கண்காணிக்கப்பட்டதில்தான் சிக்கியுள்ளார் இந்த ராஜ் குந்த்ரா. இதையடுத்து அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதையடுத்து, நேரில் ஆஜராகி அவர்களது கேள்விகளுக்கு பதில் கூறியிருக்கிறார் ராஜ் குந்த்ரா.

விசாரணைக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய ராஜ்குந்த்ரா “நான் சாட்சியமாகத்தான் இந்த விசாரணைக்கு அழைக்கப்பட்டேனே தவிர, என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. நாடு முழுவதும் என் பெயரில் ஒளிபரப்பப்பட்ட பிரேக்கிங் நியூஸ்களுக்கு நன்றி” என்று கூறினார்.

ஏற்கனவே, ஐபிஎல் ஊழலில் சிக்கியதால் ராஜ் குந்த்ராவை கிரிக்கெட் தொடர்பான அனைத்து செயல்பாடுகளிலிருந்தும் தடை விதித்திருக்கிறார்கள். கிரிக்கெட் ஊழல் சம்பவத்தில் அவர் மீது குற்றச்சாட்டு இல்லை என டெல்லி காவல் துறை அறிவித்ததால், தற்போது உச்ச நீதிமன்றத்தில் அவ்வழக்கிலிருந்து தனது பெயரை நீக்கும்படி கோரிக்கை வைத்திருக்கிறார் ராஜ் குந்த்ரா.

இது இப்படியிருக்க, இந்த பிட்காயின் வழக்கில் தற்போது இவர் சிக்கியுள்ளதுபோல இன்னும் சில முக்கியத் தொழிலதிபர்களும் சிக்குவார்கள் எனக் கூறப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 7 =

*