;
Athirady Tamil News

பிக் பாஸ் 2: புது வரவுகள்..!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஜூன் 17ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை நடைபெறவிருக்கும் கால்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டியைப் பற்றிக் கவலையில்லாமல் பிக் பாஸ் இரண்டாவது சீசனை தொடங்குவதன் காரணம், தங்களது போட்டியாளர்கள் மீது பிக் பாஸ் வைத்திருக்கும் நம்பிக்கை. எல்லா விதத்திலும் ரசிகர்களைப் பொழுதுபோக்கக்கூடிய போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவந்திருக்கிறார் பிக் பாஸ்.

சிம்ரன் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகச் சிறந்து விளங்கும் ரியோ மற்றும் டிடி ஆகிய இருவரையும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தெரிகிறது. எந்தக் கேள்வி கேட்டாலும், கேட்டதற்கு மேலும் பதில் சொல்லும் ரியோ, பிக் பாஸ் கேள்விக்கு மட்டும் வாயையே திறப்பதில்லை என்கின்றனர் அவருக்கு நெருங்கியவர்கள். டிடி தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சியைக் கவனிக்க வேறொரு முன்னணி தொகுப்பாளினி மீண்டும் அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடித்திருக்கும் சிம்ரன், டிடி ஆகியோர் உள்ளே சென்று படத்தைப் பற்றிப் பேசுவது நல்ல புரமோஷனாக அமையும் என்று கௌதம் மேனனின் ரசிகர்கள் கணித்துவருகின்றனர். இதற்காகவே, கௌதம் மேனன் வீடியோ ஆல்பம் ஒன்றில் டிடியை நடிக்க வைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. டிடி பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தாலும், அவர் பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கும் எனும்போது 100 நாட்களைப் பணத்துடன் செலவு செய்ய யாராவது தயங்குவார்களா?

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − thirteen =

*