;
Athirady Tamil News

சந்தீப் தேர்ந்தெடுத்த அமானுஷ்யக் கதை..!!

0

சந்தீப் கிஷன் அடுத்ததாகத் தான் நடிக்கும் புதிய படத்திற்காக முதன்முறையாக அமானுஷ்யக் கதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம்வரும் சந்தீப் கிஷன் யாருடா மகேஷ் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ரெஜினாவுடன் இணைந்து நடித்த மாநகரம் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. தொடர்ந்து நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் படங்களில் நடித்த அவர் தற்போது அரவிந்த் சாமியுடன் இணைந்து நடித்துள்ள நரகாசூரன் படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்துள்ளார். மனசுக்கு நச்சிண்டி என்ற தெலுங்குப் படத்தில் நடித்த அவர் அதைத் தொடர்ந்து எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாமல் ஓய்வில் இருந்தார். முழுவதும் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்ட சந்தீப் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகவுள்ள ஹாரர் படத்தில் நடிக்கவுள்ளார்.

அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கும் இந்தப் படத்தில் அமானுஷ்யக் கதையை உணர்வுபூர்வமாக அணுகி திரைக்கதை அமைத்துள்ளனர். சந்தீப் இதுவரை ஹாரர் பாணி படங்களில் நடித்ததில்லை. திரைத் துறையில் ஒவ்வொரு ஜானர் படங்களும் குறிப்பிட்ட காலத்தில் ரசிகர்களிடம் வரவேற்பு பெறும். ஆனால் ஹாரர் பாணி படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருந்துவரும் பட்சத்தில் சந்தீப் தற்போது அந்த வகைப் படத்தில் முதன்முறையாகக் களமிறங்கவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 2 =

*