;
Athirady Tamil News

தப்ஸி விலகல் ஏன்?..!!

0

நடிகை தப்ஸி, பாலிவுட் முன்னணி நடிகர் நவாஸ்தீன் சித்திக்குக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழில் அதிகம் தென்படவில்லை என்றாலும் இந்திப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை தப்ஸி. அங்கு அவர் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் உள்ளது.

இந்தநிலையில், தப்ஸி இயக்குநர் ஹனி ட்ரேகன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அது ஹாரர் கதைக்களத்தைக் கொண்ட படம் எனவும் கூறப்பட்டது. ஆனால், கதையைக் கேட்ட தப்ஸி, படத்தில் நாயகனாக நவாஸுதீன் சித்திக் நடிப்பதால் தான் நடிக்கவில்லை என இயக்குநரிடம் சொல்லி பின் வாங்கியதாகவும் ஒரு தகவல் பரவியது.

இதனால் தப்ஸிக்கும், நவாஸுதீனுக்கும் என்ன பிரச்சினை எனத் தெரியாமல் இருந்து வந்தது பாலிவுட் வட்டாரம்.

இந்த நிலையில் நவாஸுதீன் சித்திக் அவரது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடன் ஏதோ ஒரு நடிகை நடிக்க மாட்டேன் என சொன்னதாகத் தகவல்கள் வருகின்றன. அதற்கு முன் நான் ஒரு விளக்கத்தைச் சொல்லியாக வேண்டும். அதாவது, அவர் சொல்வதுபோல எந்த ஓர் ஹாரர் படத்திலுமே நான் நடிக்க கமிட் ஆகவில்லை. எனவே, இந்தத் தகவல் அடிப்படையிலேயே தவறானது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகர் இர்ஃபான் கான் மற்றும் தீபிகா படுகோனே நடிக்க இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கி வரும் ஒரு படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்தான் இந்த ஹனி ட்ரேஹன் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 1 =

*