;
Athirady Tamil News

களைகட்டும் ஃபிலிம்பேர்: விருதுகள் யாருக்கு?..!!

0

65ஆவது ஃபிலிம்பேர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட தமிழ் நடிகர்கள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சினிமாத்துறைக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உயரிய விருதாகக் கருதப்படுவது தேசிய விருது. அந்தத் தேசிய விருதுக்குப் பின், சினிமா கலைஞர்கள் அதிகம் எதிர்பார்ப்பது இந்த ஃபிலிம்பேர் விருதுகளையே. தற்போது 65வது பிலிம்பேர் விருது விழா ஜூன் 16ம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

அதை முன்னிட்டு இந்த விருதுப்பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் தமிழ் நடிகர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அவையாவன:

சிறந்த படங்கள்:

அறம், அருவி, தரமணி, தீரன் அதிகாரம் ஒன்று, விக்ரம் வேதா.

சிறந்த நடிகர்கள்:

கார்த்தி (தீரன் ), மாதவன் (விக்ரம் வேதா), ராஜ்கிரண் (பவர் பாண்டி) விஜய் (மெர்சல்), விஜய் சேதுபதி (விக்ரம் வேதா).

சிறந்த நடிகைகள்:

அதிதி பாலன் (அருவி), அமலாபால் ( திருட்டுபயலே 2), ஆண்ட்ரியா(தரமணி), ஜோதிகா (மகளிர் மட்டும்), நயன்தாரா (அறம்), ரேவதி(பவர் பாண்டி).

சிறந்த இயக்குனர்கள்:

அருண் பிரபு புருஷோத்தமன்( அருவி), அட்லி ( மெர்சல்), தனுஷ் ( பவர் பாண்டி), கோபி நயினார்( அறம்), வினோத் ( தீரன் அதிகாரம் ஒன்று), புஷ்கர் காயத்ரி( விக்ரம் வேதா)

சிறந்த துணை நடிகர்:

அபிமன்யூ சிங் ( தீரன்), பிரசன்னா (திருட்டுபயலே-2), எஸ்ஜே சூர்யா (மெர்சல்),வினய் (துப்பறிவாளன்), விவேக் ஒபராய் (விவேகம்)

சிறந்த துணை நடிகை:

அஞ்சலி வரதன் (அருவி) , பானுப்பிரியா (மகளிர் மட்டும்), நித்யா மேனன் (மெர்சல்) ஊர்வசி(மகளிர் மட்டும்), வரலட்சுமி சரத்குமார் (விக்ரம் வேதா)

சிறந்த இசையமைப்பாளர்:

அனிருத் (வேலைக்காரன்), அனிருத் (விவேகம்),ஏ.ஆர்.ரஹ்மான் (காற்று வெளியிடை), ஏ.ஆர்.ரஹ்மான் (மெர்சல்), இமான் (போகன்)

கடந்த முறை நடந்த 64ஆவது ஃபிலிம்பேரில் சிறந்த படமாக ஜோக்கர், சிறந்த இயக்குநராக சுதா கொங்கரா, சிறந்த நடிகராக மாதவன், சிறந்த நடிகையாக ரித்திகா சிங் ஆகியோர் விருது வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + seventeen =

*