;
Athirady Tamil News

பிரசாந்த் – சினேகா கூட்டணி..!!

0

நடிகர் பிரசாந்த் – சினேகா கூட்டணியில் தற்போது தெலுங்குப் படம் ஒன்று உருவாகிவருகிறது.

தமிழ் ரசிகர்கள் மனதில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ஹீரோயின் சினேகா. முக்கியமாக கிராமப்புறங்களில். இவர் தமிழில் அறிமுகமான திரைப்படம் விரும்புகிறேன். இப்படத்தில் பிரசாந்த், சினேகா இணைந்து நடித்திருந்தனர். சுசிகணேசன் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்திற்குப் பிறகு கலைஞரின் கை வண்ணத்தில் வந்த பொன்னர் சங்கர் மற்றும் ஆயுதம் போன்ற படங்களில் பிரஷாந்துடன் இணைந்து நடித்திருந்தார் சினேகா.

இந்நிலையில் தெலுங்கில் வெளியான ரங்கஸ்தலம் படத்தின் வெற்றிக்குப் பிறகு ராம்சரண் நடித்துவரும் புதிய படத்தில் இவ்விருவரும் இணைந்து நடித்துவருகின்றனர். போயாபதி ஸ்ரீனி இப்படத்தை இயக்கிவருகிறார். மேலும் 40 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் சல்மான் கானின் பயிற்சியாளரை அழைத்துவந்து சிக்ஸ்பேக் கெட்டப்புக்கு மாறிக் கொண்டிருக்கிறார் ராம்சரண். இந்தப் படத்தில் ராம்சரணுடன் கியாரா அத்வானி, விவேக் ஓபராய், பிரசாந்த், சினேகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் பிரசாந்த், சினேகா நான்காவது முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − four =

*