;
Athirady Tamil News

‘சொடக்கு’ பாடலுக்கு சாயிஷா ஆடிய நடனம்..!!!

0

சாயிஷா ‘சொடக்கு’ பாடலுக்கு ஆடிய நடனம் அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது.

கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான சாயிஷா அடுத்தடுத்து வெளியாகவுள்ள மூன்று படங்களை எதிர்பார்த்துள்ளார்.

ஆர்யாவுடன் இவர் நடித்துள்ள கஜினிகாந்த் திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெறப்பட்டுள்ள நிலையில் இந்த மாதம் வெளியிடப்படவிருக்கிறது. விஜய் சேதுபதியின் ஜோடியாக இவர் நடித்துள்ள ஜுங்கா திரைப்படத்தின் இசை ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் எனப் படக் குழு இன்று (ஜூன் 9) அறிவித்துள்ளது. இவர் நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தின் இசை ஜூன் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படங்கள் தவிர சாயிஷா கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ஜூன் மாத இறுதியில் லண்டனில் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் சாயிஷா இணையவுள்ளார். இந்நிலையில் சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடலுக்கு நடனமாடி அதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவேற்றியுள்ளார். இந்தப் பாடல் வெளியானபோதே அரசியல்வாதிகளை அவமதிப்பதாக சர்ச்சையை கிளப்பியது. தற்போது இந்த பாடலுக்கு சாயிஷா ஆடிய நடனம் அவரது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 3 =

*