;
Athirady Tamil News

கண்டுபிடிக்கப்பட்ட ஏமியின் ஜோடி..!!

0

நடிகையும் மாடலுமான ஏமி ஜாக்சனுக்கு ஒரு பெண்ணுடன் இருக்கும் தொடர்பு பற்றித் தகவல்கள் வந்த நிலையில், தற்போது யார் அந்தப் பெண் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏமி ஜாக்சன் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழி படங்களில் நடித்துப் பிரபலமானவர். தற்போது ஹாலிவுட்டில் சூப்பர் கேர்ள் என்ற சீரியல் ஒன்றிலும் நடித்துவருகிறார். இந்த சீரியல் வாய்ப்புக் காரணமாக பெரும்பாலும் திரைப்படங்கள் நடிப்பதைத் தவிர்த்துவருகிறார் ஏமி. எனினும் நல்ல கதை மற்றும் முன்னணி ஹீரோக்கள் படம் என்றால் சம்மதம் தெரிவிக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள 2.0 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு கிளப்பில் இவர் தன் தோழிக்கு லிப்-லாக் முத்தம் கொடுக்க, அந்தப் புகைப்படம் வெளியாகிப் பலரது விமர்சனத்தைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து தான் ஒரு பெண்ணுக்கு, மனைவியாக வாழ்கிறேன் எனக் கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஏமி. இதனால் பலரும் சமூக வலைதளத்தில், ஏமி அந்தப் பெண்ணுடன் லெஸ்பியன் வாழ்க்கை வாழ்ந்துவருவதாகக் கூறினர். மேலும் ஏமியுடன் இருக்கும் அந்தப் பெண் யார் என்றும் அனைவரது மத்தியிலும் ஒரு கேள்வி எழுந்தது.

தற்போது அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஏமி ஜாக்சனுடன் இருக்கும் அந்தப் பெண்ணின் பெயர் நீலம் கில், 23 வயதான இவர் ஒரு மாடல். இவர் நிறைய ஃபேஷன் ஷோக்களில் பங்குபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 16 =

*