;
Athirady Tamil News

நிறைவு பெற்ற பாடல் காட்சிகள்..!!

0

நடிகர் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் பாடல் காட்சிகள் நிறைவடைந்துள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் நடிகர் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தகவல்களை அடிக்கடி படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இப்படத்தின் பாடல் காட்சிகள் முடிந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் வரும் பாடல் காட்சிகளை நடன இயக்குநர் ஸ்ரீதர் கவனித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி, வில்லு, துப்பாக்கி, தலைவா, ஜில்லா மற்றும் தெறி ஆகியத் திரைப்படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறார்.

சமகால பிரச்சனைகளை வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன், முருகதாஸுடன் இணைந்து திரைக்கதையில் பணியாற்றியுள்ளார். பைரவா படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் ராதாரவி, பழ.கருப்பையா, லிவ்விங்ஸ்டன் மற்றும் யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × five =

*