;
Athirady Tamil News

அஜித் படத்தில் முதன்முறையாக இணைந்த கலைஞர்..!!

0

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படம் விஸ்வாசம். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக முன்னணி ஸ்டண்ட் கலைஞர்களில் ஒருவரான திலீப் சுப்பராயன் அஜித்துடன் பணியாற்றுகிறார்.

விஸ்வாசம் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முப்பது முதல் முப்பந்தைந்து நாள்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. வசனம் பேசி நடிக்கும் காட்சிகள் உட்பட பாடல் காட்சியும் சண்டைக் காட்சியையும் சிவா படமாக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் அஜித்-திலீப் சுப்பராயன் முதன் முறையாக இணைந்து பணியாற்றுகின்றனர்.

ஸ்டண்ட் கலைஞராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம்வரும் திலீப் சுப்பராயன் விஜய், விஜய் சேதுபதி, விஷால், சிவகார்த்திகேயன், கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் மற்றும் மணிரத்னம் இயக்கிவரும் செக்க சிவந்த வானம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் கலைஞராகப் பணியாற்றியுள்ளார். இவர் கதாநாயகனாக நடித்த சங்கு சக்கரம் படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

விஸ்வாசம் படத்தில் யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், ரமேஷ் திலக் ஆகியோர் முதல் கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 5 =

*