;
Athirady Tamil News

இனியாவின் சேவைக் குணம்..!!

0

நடிகை இனியா மியா என்ற சமூக விழிப்புணர்வு இசை ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த ஆல்பத்தின் மூலம் வசூலாகும் பணத்தில் புற்றுநோயால் பாதித்த 10 பேருக்கு மருத்துவ உதவி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு இயக்குநர் சற்குணம் இயக்கிய வாகை சூடவா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை இனியா. முதல் படத்திலேயே தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இனியா தற்போது மியா என்ற இசை ஆல்பத்தில் நடித்துள்ளார். இது ஒரு சமூக விழிப்புணர்வு பாடல் ஆல்பம். இந்த ஆல்பத்தை மகேஷ் என்பவர் இயக்கியுள்ளார். இதற்கு அபிரெஜி, லாவெல், ஜெயன் ஆகியோர் இசை அமைத்துள்ளனர். பாடலுக்கு அருண் நந்தகுமார் நடனம் அமைத்துள்ளார். இனியா நடித்த இந்த ஆல்பம் விரைவில் வெளிவரவிருக்கிறது.

இந்த ஆல்பம் பற்றி சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இனியா பேசும் போது, “இந்த மியா வீடியோ ஆல்பம் எனது முதல் முயற்சி. இதற்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளேன். இதில் ஒரு பெண்ணின் கடின உழைப்பு இருக்கிறது, அழகான இசை மற்றும் நடனம் அமைந்திருக்கிறது.

மேலும் இந்த ஆல்பத்தின் மூலம் வசூலாகும் பணத்தில் புற்றுநோயால் பாதித்த 10 பேருக்கு மருத்துவ உதவி செய்ய திட்டமிட்டுள்ளார்கள். இதைப் போல இன்னும் நிறையத் திட்டமிட்டுள்ளோம். இந்த உலகத்தில் உள்ள எல்லா டான்ஸர்களுக்கும் மியாவை காணிக்கையாக்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

வழக்கமான இசை ஆல்பங்களில் இருந்து வேறுபட்டு, ஹைடெக் சினிமா நேர்த்தியுடன் இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − eight =

*