;
Athirady Tamil News

நர்கீஸாக மாறிய மனிஷா..!!

0

இந்தியில் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படத்தில் நடிகை நர்கீஸ் கதாபாத்திரத்தில் மனிஷா கொய்ராலா நடித்துள்ளார்.

ஒரு திரைப்படத்தில் திரைக்கதைக்கேற்றாற்போல் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகர்கள் அமைந்துவிட்டால் படம் பாதி வெற்றிதான். அதன் பின் அதற்கேற்றாற்போல் இடங்கள் மற்றும் குழுவும் அமைந்தால் படம் முழு வெற்றி. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகியுள்ள சஞ்சு திரைப்படம் அவ்வாறாக அமைந்திருக்கிறது. இந்தப் படம் சஞ்சய் தத் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் திரைப்படமாக அமைந்திருப்பதால் அவரது அம்மா நர்கிஸ் கதாபாத்திரத்தை நடிகை மனிஷா கொய்ராலா ஏற்று நடித்துள்ளார்.

புகழ்பெற்ற இந்தி நடிகை நர்கீஸ். இவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து 1940 மற்றும் 50களில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். முதன் முதலில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியப் படமான மதர் இந்தியாவில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. நடிகர் சுனில் தத்தை மணந்து திருமணத்துக்குப் பிறகு நடித்து வெளிவந்த ராத் அவுர் தின் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். 1981ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

படத்தின் இயக்குநரான ராஜ்குமார் ஹிரானி சஞ்சு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். “ நர்கீஸ் சஞ்சய் தத்தை அன்பாக சஞ்சு என்று அழைத்தார், இதை நாமும் செய்ய வேண்டும். எனவே மனிஷாவை நர்கீஸாக பார்க்க வரும் ஜூன் 29ஆம் தேதி தயாராகுங்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த போஸ்டரில் மனிஷா கொய்ராலாவின் தோற்றம் நர்கீஸ் போன்று அச்சு அசலாக இருப்பதாக அனைவரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

தமிழில் பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்திருந்த மனிஷா கொய்ராலாவுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பிவந்தார். சஞ்சு படம் மூலம் சினிமாவில் மீண்டும் ஒரு என்ட்ரிக்குத் தயாராகிறார் மனிஷா.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 5 =

*