;
Athirady Tamil News

அதர்வா படத்தின் அடுத்த அறிவிப்பு..!!

0

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகாஷ் நடிப்பில் உருவாகும் பூமராங் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்துக்குப் பிறகு அதர்வா நடிப்பில் செம போத ஆகாதே திரைப்படம் திரையரங்கில் வெளியாகத் தயாராகி இருக்கிறது. மேலும், அதர்வா தற்போது ருக்குமணி வண்டி வருது, இமைக்கா நொடிகள், ஒத்தைக்கு ஒத்த, பூமராங் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இதில் பூமராங் படத்தை, இவன் தந்திரன் படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக கண்ணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அதர்வாவுடனான இந்த அழகான பயணம் நேற்று முடிவடைந்தது. திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்க ஒத்துழைப்பளித்த அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார் கண்ணன்.

பூமராங் படத்தில் அதர்வா ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாசினி மணிரத்னம், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக பாலிவுட் நடிகர் உபேன் படேல் நடித்திருக்கிறார். மசாலா பிக்ஸ் சார்பில் கண்ணன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ரதன் இசையமைக்க, பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + nineteen =

*