;
Athirady Tamil News

தஞ்சாவூர் பெண்ணான ஓவியா..!!

0

‘களவாணி 2’ படத்தின் படப்பிடிப்புக்காகப் பழைமையான வீட்டை உருவாக்கியுள்ளனர்.

பிக் பாஸ் மூலம் ஓவியாவுக்குப் பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியிருந்தாலும் அவரை தமிழ்த் திரையுலகுக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் சற்குணம். 2010ஆம் ஆண்டு அவர் முதன்முறையாக இயக்கிய களவாணி திரைப்படம் மூலம்தான் ஓவியா அறிமுகமானார். அந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. எட்டு ஆண்டுகளுக்குப் பின் அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

முதல் பாகத்தை போலவே விமல் கதாநாயகனாக நடிக்க ஏனைய கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் அப்படியே தொடர்கின்றனர். விமலின் நண்பனாக வலம்வந்த சூரி மட்டும் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகவில்லை. அவருக்குப் பதிலாக யூடியூப் சேனல் மூலம் பிரபலமான விக்னேஷ்காந்த் இணைந்துள்ளார். பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் கடந்த மாத இறுதியில் ஓவியா படக்குழுவுடன் இணைந்தார்.

கடந்த சில நாள்களாக விமல், ஓவியா சம்பந்தப்பட்ட காட்சிகளை தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கி வருகின்றனர். ‘ஒட்டாரம் பண்ணாதே’ என்ற பாடல் காட்சியின் படப்பிடிப்புக்காக கலை இயக்குநர் குணசேகர் பழைமையான வீட்டை உருவாக்கியுள்ளார்.

முதல் பாகத்தைப் போலவே தஞ்சாவூர் பகுதி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் காதலும் காமெடியும் கலந்து இந்தப் படம் உருவாகி வருகிறது. ஜூன் 22ஆம் தேதிக்குள் படப்பிடிப்பை முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + fourteen =

*