;
Athirady Tamil News

தலைவராகிறார் மோகன்லால்..!!

0

நடிகர் மோகன்லால் மலையாளத் திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவராகப் போட்டியின்றி தேர்வாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 17 வருடங்களாக மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இன்னசென்ட் இருந்து வருகிறார். இவர் பதவி ஏற்ற பிறகு நடிகர், நடிகைகளின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க நடவடிக்கையும் எடுத்தார். நடிகை ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்ட சம்பவத்தையும் இன்னசென்ட் திறமையாகக் கையாண்டு நடிகர் சங்கத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் இன்னசென்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதற்கான சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து உள்ளார். ஆனாலும், முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக, விரைவில் நடைபெற உள்ள நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் தான் போட்டியிட விரும்பவில்லை என்று இன்னசென்ட் அறிவித்துள்ளார்.

இதனால் மலையாள நடிகர் சங்கத்தின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. மலையாளத் திரையுலகில் சூப்பர் ஸ்டார்களாக விளங்கும் மோகன்லால், மம்முட்டி ஆகியோரில் ஒருவர் புதிய நடிகர் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற பேச்சும் மலையாள பட உலகில் எழுந்தது.

இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்து மோகன்லால் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதுவரை அவரை எதிர்த்துப் போட்டியிட யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. இதைத் தொடர்ந்து விரைவில் கேரள நடிகர் சங்கப் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் நடிகர் மோகன்லால் தலைவர் பதவிக்குப் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 12 =

*