;
Athirady Tamil News

ஜான்வி குறித்து அர்ஜுன் கபூர் உருக்கம்..!!

0

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகவுள்ளதையடுத்து அவரது சகோதரர் அர்ஜுன் கபூர் உருக்கமான பதிவு ஒன்றை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்திய சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக விளங்கிய நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் மறைந்தார். இந்நிலையில் அவரது இரு மகள்களில் ஒருவரான ஜான்வி தற்போது சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார். அவ்வகையில் அவர் நடிப்பில் ஷஷான் கைதன் இயக்கிய ‘தடக்’ எனும் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இதுகுறித்து ஜான்வியின் சகோதரர் அர்ஜுன் கபூர் இன்ஸ்டாகிராமில் , “இனி உன்னையும் ரசிகர்கள் கொண்டாடப்போகிறார்கள். காரணம் ட்ரைலர் வெளியாகியிருக்கிறது. இவ்வேளையில் நான் மும்பையில் இருந்து உனக்கு உதவ முடியாததற்காக முதலில் வருந்துகிறேன்.ஆனால் உன்னுடன் உனக்கு ஆதரவாக என்றும் இருப்பேன். உனது படம் வெற்றியடைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

அர்ஜூன் கபூருக்கும் ஸ்ரீதேவியின் குடும்பத்துக்கும் ஸ்ரீதேவியின் மறைவுக்கு முன்னர் சில கருத்து முரண்பாடுகள் இருந்ததாகக் கூறப்பட்டது. மறைவுக்குப் பின்னர் அக்குடும்பத்தில் தற்போது இணக்கமான சூழல் நிலவுவதை இதுபோன்ற சில நிகழ்வுகள் மூலம் அறிய முடிகிறது.

நடிகர் அர்ஜுன் கபூரின் முதல் திரைப்படம் வெளியாக இருந்த சில மாதங்களுக்கு முன்னர் அர்ஜூன் கபூரின் தாய் மறைந்தார். தற்போது அதேபோல ஸ்ரீதேவியின் மறைவையடுத்த சில மாதங்களில் ஜான்வி கபூரின் முதல் திரைப்படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + nine =

*