;
Athirady Tamil News

தூத்துக்குடியால் பின்வாங்கிய ‘துப்பாக்கி முனை..!!

0

துப்பாக்கி முனை படத்தின் டீசர் வெளியீடு தள்ளிப்போயுள்ளது.

பிரபு தேவாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த குலேபகாவலி படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டில் ஹன்சிகா நடிப்பில் வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. உடல் எடையைக் குறைத்த பின் ஹன்சிகா நடிக்கும் அடுத்தப் படத்தை காண ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் துப்பாக்கி முனை படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். ஜனவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. வி கிரியேஷன் சார்பில் தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி சினிமா கற்றவர். தற்போது படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் டீசர் வெளியீட்டைப் படக்குழு தள்ளிவைத்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனால் காவல் துறை மீது பொதுமக்களுக்கு அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில் காவல் துறையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் என்கவுன்ட்டர்களை நியாயப்படுத்தும்படியான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனவே, இதன் டீசரை தற்போது வெளியிட்டால் அது ரசிகர்களிடம் எதிர்ப்பைப் பெறும் எனக் கருதி படக்குழு டீசர் வெளியீட்டைத் தள்ளிவைத்துள்ளது.

ஏற்கெனவே ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி ஸ்கொயர் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு தள்ளிப்போனதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + two =

*