;
Athirady Tamil News

பாலா படத்தில் காலா நாயகி..!!

0

நடிகை ஈஸ்வரி ராவ், இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வர்மா திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

சமீபத்தில் வெளியான காலா திரைப்படத்தில் ரஜினிக்கு மனைவியாகச் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஈஸ்வரி. தனது இயல்பான நடிப்பின் மூலம் படம்பார்த்த அனைவரது மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

ஈஸ்வரி 90களில் முன்னணி கதாநாயகியாக பல படங்களில் நடித்திருக்கிறார். அதில் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த ராமன் அப்துல்லா திரைப்படம் குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்குப் பின் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகி இருந்தார். பிறகு சில திரைப்படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்து வந்தார்.

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான சுள்ளான் திரைப்படத்தில் தனுஷுக்கு அக்காவாக நடித்திருந்தார். மேலும் பிரகாஷ் ராஜ் மனைவியாக, சிம்பு நடிப்பில் வெளியான சரவணா படத்திலும் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றுள்ள அவர் வர்மா படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

வர்மா தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீ மேக் ஆகும். இப்படத்தில் நாயகனாக நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + seven =

*