;
Athirady Tamil News

நடனப் புயலுடன் ஜோடி சேர்ந்த நிவேதா..!!

0

பிரபு தேவா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நிவேதா பெத்துராஜ்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் நிவேதா கதாநாயகியாக நடித்திருந்தார். கிராமத்துப் பெண்ணாக வலம்வந்த அவர், அந்தப் படம் மூலம் நல்ல கவனம் பெற்றார். கடந்த ஆண்டு வெளியான அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வேறெந்த படமும் வெளியாகாவிடினும் தற்போது அவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸை எதிர்பார்த்துள்ளன.

ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக் திரைப்படத்தில் விண்வெளி வீராங்கனையாக நடித்துள்ள நிவேதா, விஜய் ஆண்டனி நடிக்கும் திமிரு புடிச்சவன் படத்தில் போலீஸாக நடித்துள்ளார். இது தவிர வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் பார்ட்டி மற்றும் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார்.

தற்போது ஏ.ஜி.முகில் இயக்கும் புதிய படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நிவேதா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக பிரபு தேவா காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். நேமிசந்த் ஜபக் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + three =

*