;
Athirady Tamil News

வருமான வரி: த்ரிஷாவுக்கு க்ரீன் சிக்னல்..!!

0

வருமானத்தை மறைத்ததாக நடிகை த்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட ஒரு கோடியே 16 லட்சத்து 11 ஆயிரத்து 20 ரூபாய் அபராதத்தை ரத்து செய்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நடிகை த்ரிஷா 2010-11ஆம் நிதியாண்டில் 3 கோடியே 51 லட்சத்து 71 ஆயிரத்து 53 ரூபாய் வருமானத்தை மறைத்ததாகவும், ஏற்கனவே கணக்கில் காட்டிய வருமான வரி செலுத்தியதற்கான கணக்கை காட்டவில்லை என்றும் புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து ஒரு கோடியே 16 லட்சத்து 11 ஆயிரத்து 20 ரூபாய் அபராதம் விதித்து வருமான வரித்துறை துணை ஆணையர் 2013ஆம் ஆண்டு செப்டம்பரில் உத்தரவு பிறப்பித்தார்.

2010-11ஆம் ஆண்டு படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை, 2012-13ஆம் அண்டு தாக்கல் செய்த திருத்தப்பட்ட வருமான வரி கானக்கில் காட்டியதாகவும் அதை கருத்தில் கொள்ளாமல் தனக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை ஆணையரிடம் த்ரிஷா தரப்பில் முறையிடப்பட்டது.

இதை ஏற்று, த்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட ஒரு கோடியே 16 லட்சம் அபராதத்தை ரத்து செய்து ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் உறுதி செய்தது.

இதனை எதிர்த்து, வருமானவரித்றை முதன்மை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை (ஜூன் 15) விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு, வருமானத்தை மறைக்காத த்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு சரிதான் என தீர்ப்பளித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*