;
Athirady Tamil News

முதல் இடத்தில் தீபிகா, பிரியங்கா..!!

0

கதாநாயகர்களை ஒப்பிடுகையில் கதாநாயகிகளின் சம்பளம் குறைவு என்றாலும் பாலிவுட்டில் தீபிகா, பிரியங்கா சோப்ரா பெரியளவிலான தொகையைச் சம்பளமாகப் பெறுகிறார்கள்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்த பத்மாவத் திரைப்படம் வசூல் சாதனை படைத்தது. படம் வெளிவருமா, வராதா எனப் படக்குழு கலக்கத்தில் இருந்த நிலையில் படம் வெளியாகி ரூ.500 கோடியைக் கடந்து வசூல் ஈட்டியது. இந்தப் படத்துக்காக தீபிகாவுக்கு 12 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது.

பாலிவுட்டைத் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் வலம்வரும் தீபிகாவைப் போலவே பிரியங்காவும் இரு இடங்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறார். தீபிகா 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதைத் தொடர்ந்து பிரியங்கா சல்மான் கானோடு இணைந்து நடிக்கும் பாரத் படத்துக்காக 14 கோடி ரூபாய் கேட்டுள்ளார். இறுதியில் தயாரிப்பாளர் தரப்பு 12 கோடி ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, அதிகளவிலான சம்பளம் பெறும் நடிகைகளாக தீபிகாவும் பிரியங்காவும் முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

பாரத் திரைப்படம் 2014ஆம் ஆண்டு வெளியான ‘ஒடி டு மை ஃபாதர்’ என்ற தென்கொரியத் திரைப்படத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்தின் மூலம் சல்மான் கான் மூன்றாவது முறையாக அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதுல் அக்னிகோத்ரி, அல்விரா கான் இணைந்து தயாரிக்கின்றனர். இரு கதாநாயகிகளில் ஒருவராக திஷா பதானியும் நடிக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*