;
Athirady Tamil News

நயன்தாராவையே மயக்கிய யோகிபாபு..!!

0

நடிகர் யோகிபாபுவின் நடிப்பைப் பார்த்துப் பிரமித்த நடிகை நயன்தாரா தனது அடுத்த படத்திலும் அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது காமெடியில் கலக்கி வருபவர் நடிகர் யோகிபாபு. இவர் திரையில் வந்தாலே முன்னணி நடிகர்களுக்கு இணையான விசில் சத்தம் திரையரங்குகளில் காதைப் பிளக்கிறது. யோகிபாபுவைப் பொறுத்தவரைக்கும் பக்கம் பக்கமாக வசனங்களே இல்லையென்றாலும்கூட தனது வெள்ளந்தியான உடல் மொழி நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் இவரும் நயன்தாராவும் நடித்திருந்த கோலமாவு கோகிலா படத்தின் கல்யாண வயசு எனும் பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தையடுத்து ‘லக்ஷ்மி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த சர்ஜுனை இயக்குநராக்கி அதில் நாயகியாகவும் நடிக்கவுள்ளார் நயன்தாரா. இந்த நிலையில், கோலமாவு கோகிலா படத்தில் நடிகர் யோகிபாபுவின் அசாத்திய நடிப்பைப் பார்த்து வியந்த நயன்தாரா இந்தப் படத்திலும் யோகிபாபுவை நடிக்க வைக்க சிபாரிசு செய்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 4 =

*