;
Athirady Tamil News

‘ஓ’ போடும் அஞ்சலி..!!

0

தெலுங்கு, மலையாளம், இந்தித் திரையுலகிலிருந்து அதிக அளவில் தமிழுக்குக் கதாநாயகிகள் வந்துகொண்டிருக்கும்போது ஒரு சில தமிழ் நடிகைகளே அறிமுகமாகி கவனம் ஈர்க்கின்றனர். அதில் முன்னணியில் இருப்பவர் அஞ்சலி. கதாநாயகியாக அறிமுகமாகி பதினோரு ஆண்டுகள் கழிந்த பின்னரும் கைவசம் பல படங்களை வைத்துள்ளார் அஞ்சலி. அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நாடோடிகள் 2 படத்தை முடித்துள்ள அஞ்சலி, 3டி தொழில்நுட்பத்தில் ஹாரர் ஜானரில் உருவாகும் லிசா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றிலும் நடிக்கவுள்ளார். தற்போது அவர் நடிக்கும் மற்றொரு ஹாரர் படத்திற்கு ‘ஓ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கதாநாயகியை மையமாக வைத்து உருவாக இருக்கும் இந்தப் படத்தில் அஞ்சலி, புனிதா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரவீன் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகவுள்ளது. அஞ்சலி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் வேலைகள் முடிந்ததும் இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. காளி வெங்கட் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, அரோல் குரேலி இசையமைக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 3 =

*