;
Athirady Tamil News

வெற்றியை இனியும் தள்ளிப்போட முடியாது..!!

0

ஜெயம் ரவி நடிக்கும் இரண்டு படங்களின் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயம் ரவி தனது திரைப் பயணத்தைத் தனது சகோதரர் மோகன் ராஜா மூலம் தொடங்கியது மட்டுமல்லாமல் வெற்றிகளையும் அவரோடு இணைந்தே பெற்றுள்ளார். அவரது ஆரம்பகாலப் படங்கள் தொடர்ச்சியாக வெற்றிகளைச் சந்தித்தாலும் தனி ஒருவன் அவருக்குப் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. அந்தப் படத்தின் இயக்குநரும் அவரது சகோதரரே. அந்தப் படம் ஏற்படுத்திய அதிர்வலைகள் தமிழ் சினிமாவில் முக்கியமானது.

2015ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்த எந்தப் படமும் பெரியளவில் கவனத்தைப் பெறாமல் போனது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த வனமகனும், தனி ஒருவன் வெற்றியின் பாதிப்பால் அரவிந்த் சாமியோடு மீண்டும் கூட்டணி அமைத்த போகனும் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தன. உடனடியாக வெற்றியை அளிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ள ஜெயம் ரவிக்கு டிக் டிக் டிக் கைகொடுக்கும் என உறுதியாக நம்பலாம்.

விண்வெளி வீரர்களாக அவரும் நிவேதா பெத்துராஜும் களமிறங்கும் அப்படம் ஜனவரி மாதத்தில் இருந்து எப்போது ரிலீஸ் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. பல காரணங்களால் தள்ளிப்போய் தற்போது ஜூன் 22 ஆம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டுப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது ஜெயம் ரவி தற்போது அடங்கமறு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுவருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்தப் படத்தை தொடர்ந்து அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி தனி ஒருவன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − 4 =

*