;
Athirady Tamil News

என் பலம், பலவீனம்: பிரியங்கா..!!

0

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதைத் தெரிவித்துள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா தனது தாயின் பிறந்த நாளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “அழகான பெண்ணுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். நீதான் என் பலம் , நீதான் என் பலவீனமும் கூட. இந்த ஆண்டு சிறப்பாக இருக்கட்டும் என வாழ்த்துகிறேன். நீ விரும்பியது அனைத்தும் உனக்குக் கிடைக்கட்டும். இந்தப் பிறந்த நாளை உன்னுடன் கொண்டாட எதிர்நோக்கியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அத்துடன் தனது பழைய புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்திருக்கிறார்.

35 வயது நிரம்பிய பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் பிசியாக இயங்கிவருகிறார். அமெரிக்காவில் தங்கி ஹாலிவுட் படங்கள், டிவி சீரியலில் கவனம் செலுத்திவருகிறார். அவ்வப்போது இந்தியாவுக்கும் வந்து செல்கிறார். அண்மைக்காலமாக அவர் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸிடன் நட்புடன் பழகிவருகிறார். இது காதல் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

இப்போது நடித்துவரும் ஹாலிவுட் திரைப்படமான குவாண்டிகோ படத்தை முடித்துவிட்டு சல்மான் கானுடன் பாரத் என்ற படத்தில் பிரியங்கா நடிக்கவிருக்கிறார். 2016ஆம் ஆண்டு ஜெய் கங்காஜல் படத்தில் நடித்த பிறகு இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் பிரியங்கா பாலிவுட் படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × one =

*