;
Athirady Tamil News

பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் சல்மான்..!!

0

சல்மான் கான் நடிப்பில் ரம்ஜானை முன்னிட்டு வெளியாகியுள்ள ரேஸ் திரைப்படம் மூன்று நாள் வசூலில் நூறு கோடி ரூபாயைக் கடந்துள்ளது.

ரேஸ் 3 திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே சேட்டிலைட் உரிமையை விற்றதன் மூலம் செலவழித்த தொகையைக் கடந்து லாபம் ஈட்டியது. இந்நிலையில் திரையரங்கில் வெளியாகி முதல் மூன்று நாள்களில் இந்தியாவில் மட்டும் 106.47 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

வெள்ளிக்கிழமை 29.17 கோடி வசூலித்த இப்படம் சனி மற்றும் ஞாயிறு முறையே 38.14 கோடி, 39.16 கோடியை வசூலாகப் பெற்றுள்ளது.

சல்மான் கான் நடிப்பில் வெளியான படங்களில் மூன்று நாள்களில் 100 கோடி வசூலித்த நான்காவது படம் இதுவாகும். இதற்கு முன் பஜ்ரங்கி பாய்ஜான், சுல்தான், டைகர் ஸிண்டா கை ஆகிய படங்கள் மூன்று நாள்களில் 100 கோடியைக் கடந்துள்ளன.

சல்மான் கான் தனது படங்களை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிடுவதைத் தொடர்ச்சியாகப் பின்பற்றிவருகிறார். 2015ஆம் ஆண்டு பாஜ்ரங்கி பாய்ஜானும் 2016ஆம் ஆண்டு சுல்தானும் 2017ஆம் ஆண்டு டியூப் லைட்டும் இந்த ஆண்டு இப்படமும் ரம்ஜானை முன்னிட்டு வெளியாகியுள்ளன. இதில் டியூப் லைட் மட்டும் முதல் மூன்று நாள்களில் நூறு கோடிக்கு குறைவாக 64.77 கோடியை வசூலாகப் பெற்றது.

பாலிவுட்டில் இந்த ஆண்டு வெளியான படங்களில் பத்மாவத், சோனு கி டிட்டு கி ஸ்வீட்டி, ரெய்டு, பாகி 2, ராஸி ஆகிய படங்களை தொடர்ந்து ரேஸ் 3 முதல் மூன்று நாள்களில் 100 கோடியைக் கடந்த படங்களின் பட்டியலில் ஆறாவதாக இணைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 3 =

*