;
Athirady Tamil News

இயக்குநர்களின் நாயகி தமன்னா..!!

0

தமன்னா, உதயநிதி ஸ்டாலின் இணைந்து நடித்துவரும் கண்ணே கலைமானே படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.

தமிழை விட தெலுங்கில் பிஸியாக நடித்துவருகிறார் தமன்னா. தெலுங்கில் நந்தமுரி கல்யாண் ராமுக்கு ஜோடியாக நடித்துள்ள ‘நா..நுவே’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பு பெற்றுவருகிறது. தொடர்ந்து சை ரா நரசிம்ம ரெட்டி, தேட் இஸ் மகாலட்சுமி என தெலுங்கிலும், இந்தியிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து இந்த ஆண்டு வெளியான ஸ்கெட்ச் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து தமிழ் படங்களில் அவர் ஒப்பந்தமாகாவிடினும் சீனு ராமசாமி இயக்கத்தில் அவர் நடிக்கும் கண்ணே கலைமானே படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனு ராமசாமி- தமன்னா இணைந்து பணியாற்றிய தர்மதுரை திரைப்படம் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பே இந்த எதிர்பார்ப்பிற்கான காரணமாக உள்ளது. மார்டர்ன் பெண்ணாக வலம் வரும் தமன்னா குறிப்பிட்ட சில இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் போது கிராமப் புறம் சார்ந்த கதாபாத்திரத்திற்கும் பொருந்திப் போகிறார். அந்த வகையில் தமிழில் இவருக்கு நல்ல கவனத்தைப் பெற்றுத் தந்த படமாக கல்லூரி திரைப்படத்தைக் குறிப்பிடலாம். பாலாஜி சக்தி வேல் இயக்கத்தில் உருவான அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் நன்கு பேசப்பட்டது. அதே போன்ற அழுத்தமான கதாபாத்திரம் தர்மதுரையில் தமன்னாவுக்கு அமைந்தது. சுபாஷினி என்ற மருத்துவர் கதாபாத்திரத்தில் பொருந்திப் போயிருந்தார்.

தற்போது உதயநிதி நடிப்பில் தயாராகி வரும் கண்ணே கலைமானே படம் தேனி பகுதியை கதைக்களமாக கொண்டது. வங்கி அதிகாரியாக தமன்னா நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் அவரது கதாபாத்திரத்தின் தோற்றம் வெளியாகியுள்ளது. இதிலும் வழக்கமான தமன்னா மறைந்து சீனு ராமசாமியின் நாயகியாகவே காட்சியளிக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 9 =

*