;
Athirady Tamil News

தள்ளிப்போகும் நயன்தாரா படம்..!!

0

அறிவழகன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படத்தின் பணிகள் தயாரிப்பாளர் முடிவானதும் தொடங்கவுள்ளன.

ஈரம், குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அறிவழகன் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். த்ரில்லர் படங்களை இயக்குவதில் சிறந்து விளங்கும் அவர் கதாநாயகியை மையமாகக் கொண்ட த்ரில்லர் திரைக்கதை உருவாக்கியுள்ளார். மஞ்சு வாரியரை கதாநாயகியாக நடிக்கவைக்க முடிவெடுத்த அவர் படத்தைத் தயாரிக்க நயன்தாராவை அணுகியிருந்தார். திரைக்கதை பிடித்துப்போக நயன்தாரா, தானே கதாநாயகியாக நடிக்க விருப்பம் தெரிவித்தார். அறிவழகனும் இதற்குச் சம்மதித்தார். எஸ்.பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது.

படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் விரைவாக நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தயாரிப்பு தரப்பு பின்வாங்கியுள்ளது. இதனால் படம் கைவிடப்பட்டதாகத் தகவல் வெளியாகியது. ஆனால் வேறு தயாரிப்பாளர் முடிவானதும் நயன்தாரா படக்குழுவுடன் மீண்டும் இணையவுள்ளார். அதுவரை அவர் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ள படங்களில் கவனம் செலுத்தவுள்ளார்.

இந்தப் படத்தைத் தவிர, அஜித் நடிக்கும் விஸ்வாசம், கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சர்ஜுன் இயக்கும் புதிய படம், தெலுங்கில் சைரா நரசிம்மா ரெட்டி ஆகிய படங்களில் நயன்தாரா தற்போது நடித்துவருகிறார்.

இமைக்கா நொடிகள், அறம் 2 ஆகிய படங்களும் அவரது கைவசம் உள்ளன. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள கோலமாவு கோகிலா படத்தின் வெளியீட்டை தற்போது எதிர்பார்த்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*