;
Athirady Tamil News

சபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..!!

0

அரசியல்வாதியாகக் களமிறங்கிவிட்டாலும் கமல் தனது பட வேலைகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தொடர்ந்து பங்கெடுத்து வருகிறார்.

விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரியா, பூஜா குமார் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

கமல் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் சபாஷ் நாயுடு. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் படத்தின் படப்படிப்பு கமலுக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக நிறுத்தப்பட்டது. தசாவதாரம் படத்தில் கமல் நடித்த பத்து வேடங்களில் ஒன்றான பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. உளவுத்துறை அதிகாரியான அக்கதாபாத்திரம் தனது மகளைக் காப்பாற்ற அமெரிக்கா செல்வதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படம் தொடர்பாக படக்குழுவினரை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது, “அமெரிக்காவில் நடைபெறும் காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரே இதன் படப்பிடிப்பு நடைபெறும். அமெரிக்காவுக்குச் சென்று அக்காட்சிகள் படமாக்கப்படலாம் அல்லது ஹைதராபாத்தில் அரங்கு அமைத்து அதன் படப்பிடிப்பு நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த இரு படங்களைத் தவிர ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் கமல் கவனம் செலுத்தவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + twelve =

*