;
Athirady Tamil News

அரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..!!

0

நான் அரசியலுக்குக் கட்டாயம் வருவேன் என்று நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் தமிழக அரசியலுக்கு புதிது அல்ல. ஆனால் சில ஆண்டுகளாக அரசியல் பேச்சை எடுத்தாலே நல்ல கேள்வி… அடுத்த கேள்வி, எனப் பேசிய பல நடிகர்களும் இன்று அரசியல் அவதாரம் எடுத்திருக்கிறார்கள். மக்கள் பெரிதும் எதிர்பார்த்த ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துள்ள நிலையில் கமல் கட்சியே தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் இவர்களைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபனும் அரசியலுக்கு வர உள்ளதாகத் தெரிவித்துள்ளார். சென்னையில் பிளாஸ்டிக் இல்லா கடற்கரையை உருவாக்கி, கடல் வளத்தை பாதுகாத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீனவர்களுக்கான படகுப் போட்டி நேற்று நடத்தப்பட்டது.

அந்தப் போட்டியில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கிய பின், பத்திரிகையாளர்களைச் சந்தித்த பார்த்திபன், “நான் அரசியலுக்கு நிச்சயம் வருவேன். அதற்காகக் கால அவகாசத்தை எடுத்துக் கொண்டுள்ளேன். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்குத் தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதில் கூறும் அளவிற்கு எனக்கு அரசியல் பற்றி தெரியாது. அதற்காகத்தான் கால அவகாசம். ப்ளாஸ்டிக் தடை உத்தரவு என்ற அரசின் ஆணைகூட, ப்ளாஸ்டிக் கவரில் வைத்தே கொடுக்கப்படும் என நினைக்கிறேன். ப்ளாஸ்டிக்கிற்கு மாற்று வழி என்ன? என்பதைக் கண்டறிய வேண்டும். மேலும் எஸ்.வி. சேகரை இது வரை கைது செய்யாமல் இருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்” என்று கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*