;
Athirady Tamil News

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்துடன் கனெக்சன் ஆன இந்தியன் 2…!!

0

உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமலஹாசன் அறுவை சிகிச்சை செய்து ஓய்வு எடுத்து வந்தபோதிலும்,
மற்ற காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்தியன் 2 படத்திற்காக சென்னையில் உள்ள எம்ஜிஆர் பிலிம்சிட்டி மற்றும் பின்னி மில்லில் பிரமாண்டமான செட் போடப்பட்டு இருப்பதாகவும் இதில் 300 ஸ்டண்ட் கலைஞர்கள் கலந்து கொள்ளும் ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

மேலும் இந்த சண்டைக்காட்சியை இயக்க ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தில் சண்டைக்காட்சியை இயக்கிய ஸ்டன்ட் கலைஞர்கள் வருகை தந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது ஒத்திகை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஸ்டண்ட் காட்சியின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் அதில் கமலஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் பிரமாண்டமான சண்டைக் காட்சி அமைக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த சண்டைக் காட்சிக்கு என ஒரு கோடி ரூபாய் பட்ஜெட் போட பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது
ஹாலிவுட் படத்திற்கு இணையாக உருவாக்கியிருக்கும் இந்த சண்டைக் காட்சியை திரையில் ஆக்சன் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × two =

*