;
Athirady Tamil News

நட்சத்திரத்தின் குரல்: மண் மணம் மாறாமல் ஒரு கேரக்டர் பண்ணணும்..!! (படங்கள்)

0

சமீபத்தில் வெளியான Xவீடியோஸ் என்ற திரைப்படத்தில் துணிச்சலான கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் ரியாமிக்கா. ஷூட்டிங்கில் பள்ளி சிறுமி போல் துறுதுறுவென அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த அவரைச் சந்தித்துப் பேசியபோது அவர் பகிர்ந்துகொண்ட சில சுவாரஸ்யமான விஷயங்கள்…

உங்கள் திரைப்படப் பயணம்…

எட்டாம் வகுப்பு படிக்கும்போது, நானும் அம்மாவும் பாண்டிச்சேரிக்கு பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தோம். அதே பஸ்ஸில் அழகிய தமிழ் மகன் படத்தோட கேமராமேன் பாலசுப்ரமணியம் வந்திருந்தாங்க. அவர் என்னை ஒரு போட்டோ எடுத்துட்டு, “படத்தில் நடிக்க வைக்கலாமே” என்று சொன்னார். அவர் அப்படிச் சொன்னதும் எங்க அம்மாக்கு என்னை நடிக்க வைக்கணும்னு ஆர்வம் ஏற்பட்டுச்சு. அந்த சமயத்தில் அம்மாகிட்ட, படிச்சு முடிச்சுட்டுதான் வருவேன்னு சொல்லிட்டேன். ப்ளஸ் 2 முடிச்சுட்டு நடிக்க முயற்சி பண்ணும்போது ரொம்ப சின்ன பொண்ணா இருக்கா, வாய் பேச மாட்டீங்கறான்னு நிறைய கமெண்ட்ஸ் கொடுத்தாங்க. அதன் பிறகு காலேஜ் முடிச்சுட்டு வரும்போது ஆரம்பத்தில் இந்த பிரச்சினைகள் இருந்தது. அதுக்கப்புறம் நடிப்பின்மேல் எனக்கு இன்ட்ரஸ்ட் அதிகமாகிடுச்சு. இந்த ஜாப் நல்லா இருக்கு, இது தான் உனக்கு சூட் ஆகுதுன்னு எல்லாரும் சப்போர்ட் பண்ணும்போது, எனக்கும் நடிப்பு பிடித்திருந்ததால் டிராவல் பண்ண ஆரம்பிச்சுட்டேன். ஆரம்பத்தில் அம்மாக்காக மட்டும்தான் நடிக்க ஆரம்பிச்சேன்.

அம்மா உங்களை நடிகையாக்க விரும்பக் காரணம்?

நான் எப்போதும் போல்டான, சுட்டித்தனமான ஒரு பொண்ணு. வால்தனம் அதிகம் பண்ணிட்டு இருப்பேன். எது பண்ணிணாலும் சரியா பண்ணுவாங்கற எண்ணத்தில் என்னை நடிக்க வைத்தார்கள். அதுமில்லாமல் அந்த கேமராமேன் சொன்னதுல இருந்து, ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாமே என்று நினைத்து என்னை நடிகையாக்கினார்கள்.

உங்கள் முதல் பட அனுபவம்?

முதல் படம் என்னால் மறக்க முடியாதது. இது எல்லோருக்கும் இருக்கக்கூடிய அனுபவம்தான். களரி என்ற திரைப்படம். அது பாதியிலேயே நின்றுவிட்டது. அந்தப் படத்துக்கு ஆடிஷன் போகும்போது, டயலாக் கொடுத்து, என்கரேஜ் செய்து பண்ண வச்சாங்க. நானும் நடித்துக் காட்டி செலக்ட் ஆனேன். ஷூட்டிங் போகும்போது புதுவித அனுபவமாக இருந்தது. அங்கே தினமும் என்னோட போர்ஷன் முடிச்சுட்டு கிளம்பும்போது டைரக்டர்கிட்ட, எப்படி சார் பண்ணேன், ஏதாவது இம்ப்ரூவ் பண்ணணுமான்னு கேட்டு என்னை நானே கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிக் கொண்டேன்.

நடிக்க வருவதற்கு முன் அதற்காக எதாவது தயார் செய்து கொண்டீர்களா?

நடிப்பிற்காக நான் எதும் ப்ரிப்பேர் பண்ணல. ஃபர்ஸ்ட் மூவி பண்ணும்போதுதான் கஷ்டம் இருந்துச்சு. நடிப்புங்கிற ஒண்ணுக்குள்ள வந்ததால முழுசா இதுக்காக மட்டும்தான் நேரத்தை ஒதுக்கணும்னு முடிவு செஞ்சேன். நடிப்புக்குனு கிளாஸ்லாம் போகல. அம்மா என்ன சொன்னாங்கனா, “புதுசா நீ நடிக்க ட்ரை பண்ணனும்னு அவசியம் கிடையாது. நீ ரியல் லைஃப்ல என்னவா இருக்க, அதை இமேஜின் பண்ணி நடி” ன்னாங்க. அது போக, இயக்குநர்கள் சொல்லிக் கொடுத்ததை வெச்சு நடிச்சுக்கிட்டு இருக்கேன்.

Xவீடியோஸ் படம் எப்படி அமைந்தது?

இயக்குநர் சஜோ சுந்தர் ஆபீஸ்ல இருந்து ஆடிஷன் கால் வந்தது. முதல்ல மூவியோட டைட்டில் சொல்லல. கதை மட்டும்தான் சொன்னாங்க. கதை கேட்டதும் இது பண்ணணுமான்னு ஷாக் ஆச்சு. அதுக்கப்பறம் டைட்டில் சொல்லி, “இந்தப் படத்தில் ஃபேமலி ஓரியன்ட்டடான கேரக்டர்தான் நீங்க பண்ண போறீங்க, நம்ம பெண்களுக்கு சப்போர்ட் பண்ணி எடுக்குறோம். உங்களுடைய ஒத்துழைப்பும் தேவை”னு சொன்னதால பண்ணேன். இந்தப் படத்துக்கு கண்டிப்பா ஒரு டாக் இருக்கும். பாஸிட்டிவ்வோ, நெகட்டிவ்வோ எது போய் சேர்ந்தாலும் ஹேப்பிதானே என்று தைரியமா பண்ணினேன்.

Xவீடியோஸுக்கு முன் நீங்க நடித்த படம்?

Xவீடியோஸ் எனக்கு இரண்டாவது படம். இதற்கு முன் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்ங்கிற ஒரு படம் பண்ணி இருக்கேன். சீனு ராமசாமி சார் அசோசியேட் தயாநந்தன் பண்ணி இருக்காங்க. அது ஃபுல்லா ட்ரடிஷனலான படம்.

திரைத்துறையில் பாலியல் சீண்டல்கள் பற்றி?

நான் சப்போர்டிங் ஆர்ட்டிஸ்ட்டாதான் பண்ணிட்டு இருக்கேன். இதுவரைக்கும் என்னை யாரும் டார்ச்சர் பண்ணதில்லை. ஒருவேளை, நான் ஹேப்பியா, சுட்டித்தனம் பண்ணிட்டு, ஜாலியா இருக்கறதுனாலயோ என்னவோ யாருமே என்கிட்ட அதைப் பத்தி பேசியது கிடையாது.

அடுத்த திரைப்படங்கள்?

அகோரின்னு ஒரு படம். பாடல்களுக்கான படப்பிடிப்பு மட்டும் இன்னும் பாக்கி இருக்கு. தமிழ், மலையாளம், தெலுங்குனு மூன்று மொழிகள்ல எடுத்திருக்காங்க. அந்த படத்தில் நான்தான் லீட் ரோல் நடிச்சிருக்கேன். அதுல நாலு பசங்க, நான் ஒரே ஒரு பொண்ணு. த்ரில்லர், ஹாரர் படம். இந்தப் படத்தில் கோஆர்ட்டிஸ்ட்டில் இருந்து டெக்னீஷியன்ஸ் வரைக்கும் எல்லாருமே சின்னப் பசங்க.

நடிப்புத் துறையில் யார் மாதிரி வரணும்னு ஆசை?

எனக்கு சிம்ரன் மேம் ரொம்பப் பிடிக்கும். ஆரம்பத்திலிருந்தே அவங்களோட டான்ஸ், ஆக்டிங்ன்னா எனக்கு ஒரு க்ரேஸ். அதுக்கப்புறம் இப்ப ரீசண்ட்டா பார்த்தா அனுஷ்கா மேம், நயன்தாரா மேம். இவங்களைப் போல் நிறைய அச்சீவ் பண்ணணும்.

உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம்?

நல்லா வில்லேஜ் டைப்பில், அதுக்கு ஏத்த மாதிரி ஒரு ஸ்க்ரிப்ட்ல மண் மணம் மாறாமல் ஒரு கேரக்டர் பண்ணணும்னு ஆசை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − twelve =

*