18 May 2017 0 Comments Report

முள்ளிவாய்க்காலில் எதிர்க்கட்சி தலைவரை கடுமையாக பேசிய பெண் ..!! (வீடியோ & படங்கள் இணைப்பு)

முள்ளிவாய்க்கால் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கில் இடம்பெற்றது.

இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் உரையை தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்மந்தன் உரையாற்றினார். அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது ஊடகவியலாளர் ஒருவர் தீடிரென நீங்கள் பயங்கரவாதத்தை ஒழித்த அரசுக்கு நன்றி தெரிவித்து பாராளுமன்றத்தில் உரையாற்றியிருக்கின்றீர்கள் அதற்கு என்ன பதில் சொல்கின்றீர்கள் எனக் கேள்வி எழுப்ப அங்கு குழப்பம் ஏற்பட்டது.

தொடர்ந்து பொது மக்களும் எதிர்ப்பில் ஈடுப்பட்டனர். இது உரையாற்றும் இடமல்ல, இங்கு அரசியல் பேசாதீர்கள், நினைவேந்தல் நிகழ்வை அரசியலாக்காதீ;ர்கள், இது முள்ளிவாய்க்கால் முற்றம், என பொது மக்களும் எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.

இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் தனது உரையை சுருக்கமாக முடித்துக்கொண்டு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

தொடர்புபட்ட செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள், உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்காலில் இன்று…!! (முழுமையான வீடியோ & படங்கள்)

எமது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது..!!

முடக்கப்பட்ட 100 இணையத்தளங்களில் புலிக்கொடி – இணைய ஊடுருவலாளர்கள் கைவரிசை..!!

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து, யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அஞ்சலி..!! (வீடியோ & படங்கள்)

கிளிநொச்சியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் படுகொலை பற்றி ‘நோ கமெண்ட்ஸ்’.. ரஜினி பதிலால் ஈழத் தமிழர்கள் கொந்தளிப்பு..!!


Post a Comment

*