20 May 2017 0 Comments Report

மின் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்: அச்சத்தில் சுவிஸ் குடிமக்கள்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் அரசு கொண்டு வரவுள்ள புதிய மின்சார உற்பத்தி திட்டத்தின் விளைவாக மின் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் பாதுகாப்பான மின் உற்பத்தியை கொண்டு வரும் வகையில் அரசு Energy Strategy 2050 என்ற திட்டத்தை அறிவித்தது.

இத்திட்டத்தின் அடிப்படையில் அணு உலைகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதை நிறுத்தி விட்டு சூரிய, காற்று, பயோமாஸ், ஹைட்ரோ மற்றும் புவிவெப்பமாதல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள 5 அணு உலைகளை மூடவும் அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

அரசின் இப்புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுமார் 378 மில்லியன் பவுண்ட் வரை செலவு ஏற்படும். எனவே, இச்செலவினை ஈடுசெய்ய மின் கட்டணத்தை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

சுவிஸ் நாட்டு சட்டப்படி, அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதனை அந்நாட்டு குடிமக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

வாக்கெடுப்பின் மூலம் ஆதரவு தெரிவித்து விட்டால் அரசாங்க திட்டம் செயல்பாட்டிற்கு வரும்.

மின்சார உற்பத்தி தொடர்பான இப்புதிய திட்டத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக எதிர்வரும் ஞாயிறு அன்று பொது வாக்கெடுப்பு ஒன்று நடக்க உள்ளது.

இவ்வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு பெருமான்மை கிடைத்து விட்டால் புதிய மின்சார உற்பத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும், இத்திட்டம் செயல்பட தொடங்கினால் ஒவ்வொரு குடும்பத்தின் மின்சார கட்டணம் ஆயிரக்கணக்கான பிராங்குகள் வரை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

*