19 May 2017 0 Comments Report

இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்..!! (வீடியோ & படங்கள்)

பிரசித்தி பெற்ற யாழ். இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை நண்பகல்-12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

தொடர்ந்தும் 11 தினங்கள் சிறப்பாக இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-24 ஆம் திகதி புதன்கிழமை மாலை திருமஞ்சத் திருவிழாவும், 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தங்கச் சப்பறத் திருவிழாவும், 27 ஆம் திகதி மாலை சப்பறத் திருவிழாவும், 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தேர்த்திருவிழாவும், மறுநாள் திங்கட்கிழமை பிற்பகல்-04 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் அதனைத் தொடர்ந்து கொடியிறக்க உற்சவமும் இடம்பெறவுள்ளன.

யாழில் இருந்து அதிரடிக்காக கலைநிலா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….


Post a Comment

*