20 May 2017 0 Comments Report

பொருளாதார தன்மைக்கு சவால் மிக்க நாடாக கட்டியெழுப்பப்படும்- பிரதமர்..!!

பொருளாதார தன்மைக்கு சவால் மிக்க நாடாக இலங்கை மாறியுள்ளது.அதனை கட்டியெழுப்ப திடசந்தர்ப்பம் கொள்ளவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி செயற்றிட்ட உயர்மட்ட மகாநாடு நேற்று (19) பிற்பகல் யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதமர் தலைமையில் நடைபெற்றது.

நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு அரச அதிகாரிகள் எதிர்காலத்தில் முன்மாதிரியான திட்டங்களை முன்னேடுக்க முன்வரவேண்டும். அது நாட்டிற்கு பல்வேறான செயற்றிட்டங்களை கொண்டுள்ள அபிவிருத்தி பணிகளாக அமையும் என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார்.

குறிப்பாக எமது நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திகளை துரித கதியில் முன்னேடுக்க வேண்டும்.

பொருளாதார கொள்கைக் திட்டமிடல் அமைச்சு மற்றும் பிரதமர் செயலகத்தின் ஏற்பாட்டில் பலம் மிக்கதோர் இலங்கையில் அனைவருக்கும் நன்மை பயக்கும் ஒர் பொருளாதாரம் என்னும் தொனிப்பொருளிலான யாழ் மாவட்ட பொருளாதார ரீதியான திட்டங்களை முன்னேடுக்க நாம் பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்து இருக்கின்றோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதற்கான பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய யுகத்திற்கான மாற்றத்திற்கு எதிர்காலத்தினை சரியாக அபிவிருத்தியினை முகம் கொடுக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்த அபிவிருத்தி மாநாட்டில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்து சமய விவகாரம், சிறைசாலைகள், சட்ட ஒழுங்கு, பொது நிர்வாக கட்டமைப்பு மற்றும் காணி, இதர அபிவிருத்திட்டங்கள் தொடர்பாகவும் இதில் விரிவாக ஆராயப்பட்டது.

இங்கு அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், சாகல ரட்ணநாயக்கா, ரஞ்சித் மத்தும பண்டாரஇ ராஐங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய சோ.மாவை சேனாதிராஜா எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Post a Comment

*