19 August 2017 0 Comments Report

சாலையில் நிகழ்ந்த பயங்கரம்: சக்கரத்தில் சிக்கி பலியான பெண்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டிய பெண் ஒருவர் எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் St. Gallen மாகாணத்தில் உள்ள Grabserberg நகரில் தான் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று முன் தினம் மாலை 4 மணியளவில் 35 வயதான பெண் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் பயணமாகியுள்ளார்.

பெண்ணின் வாகனத்திற்கு முன்னால் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ட்ராக்டர் ஒன்று சென்றுள்ளது.

ட்ராக்டரை முந்தி செல்ல வேண்டும் என எண்ணிய அப்பெண் வாகனத்தை தாண்டி செல்ல முயன்றுள்ளார்.

அப்போது, எதிரே மற்றொரு வாகனம் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண் வாகனத்தின் மீது மோதாமல் இருக்க இடது பக்கமாக திரும்பியுள்ளார்.

ஆனால் துரதிஷ்டவசமாக பெண் கீழே தவறி விழுந்ததும் பின்னால் வந்துக்கொண்டு இருந்து ட்ராக்டரின் சக்கரம் அவர் மீது ஏறிச்சென்றுள்ளது.

படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை சிலர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சாலையில் அஜாக்கிரதை காரணமாக விபத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post a Comment

*