19 August 2017 0 Comments Report

34,000 பவுண்ட் மோதிரத்தை தொலைத்த நபர்: நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..

சீனாவில் தொழிலதிபர் ஒருவர் உணவகத்தில் தொலைத்த 34,000 பவுண்டு மதிப்பிலான நிச்சயதார்த்த மோதிரம் திரும்ப கிடைத்ததால் 5000 ஏழைகளுக்கு விருந்து வைத்துள்ளார்.

சீனாவில் பிரபல தொழிலதிபர் ஒருவர் தமது காதலிக்கு அணிவிக்கும் பொருட்டு 34,000 பவுண்டு மதிப்பிலான வைர மோதிரத்துடன் அவர் இருக்கும் பகுதிக்கு சந்திக்க சென்றுள்ளார்.

வழியில் நூடுல்ஸ் உணவகம் ஒன்றில் உணவருந்த சென்றவர், குறித்த உணவகத்தில் நிச்சயதார்த்த மோதிரத்தை தொலைத்துள்ளார்.

மோதிரம் தொலைந்துள்ளதை அறியாத அந்த நபர், அங்கிருந்து காதலியின் குடியிருப்புக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மோதிரம் தொலைந்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த நபர் குறித்த உணவகத்தில் வைத்து தொலைந்திருக்கலாம் என முடிவுக்கு வந்துள்ளார்.

இதனிடையே அந்த உணவகத்தில் வந்திருந்த நபர் ஒருவர் அந்த மோதிரம் அடங்கிய பெட்டியை கண்டுபிடித்து, உணவகத்தில் உள்ள நிர்வாகியிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த நிலையில் தமது காதலுக்கு சம்மதம் பெற்றுவிட்டு அந்த ஜோடி உடனடியாக குறித்த உணவகம் தேடி விரைந்துள்ளனர்.

உணவக நிர்வாகியிடம் நடந்தவற்றை கூறவும், அவர் அந்த மோதிரத்தை திருப்பி அளித்துள்ளார். இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்த அந்த நபர் 5000 கோப்பை நூடூல்ஸ் உணவை வாங்கி அனைவருக்கும் பரிசாக அளித்துள்ளார்.

இலவச உண்வை பெற்றுக் கொள்ள அப்பகுதியில் 100 மீற்றர் அளவுக்கு நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாங்கிச் சென்றுள்ளதாக குறப்படுகிறது.

இலவச உணவு வாங்கிச் சென்ற ஒருவர், காதல் மிக அழகானது, ஆனால் அதை விடவும் அழகு சிலரது இதயம் என குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

*